எதற்காக இந்த போராட்டம்..
மன வலி மறக்க தசைகளை வலிந்து
வலிக்கச் செய்து..
அர்த்தமில்லா வார்த்தைகளை புது
நம்பிக்கையின் ஊற்றாய் கண்டு..
தெளிந்திருந்த மனம்
மீண்டும் குழம்ப தவித்து..
வெற்றி பெரும் ஆர்வத்தில்
பலன்களின் மகத்துவம் எண்ணியே
அனைத்தையும் சகித்துக் கொண்டு..
ஹ்ஹும் !.. யாருக்காக
இந்த போராட்டம் ?
என் தோல்வியையும்
ரசிக்கும் உனக்காக
நானும் தோற்றுக் கொண்டே
இருப்பதில் நியாயமும் இல்லை..
சஞ்சலங்கள் கலைந்து
வெருமையில் மனம் லயிக்க
கண் இமைகள் மூடி
ஆழ்ந்து சயனிக்க
விரும்புகிறேன்..
எங்கே சாத்தியம்
என்று சொல்லுங்கள் !
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குவேன்.
1 comment:
welcome aboard கவிஞரே !! இதை தான் உன்னுடைய முதல் கவிதை என்று சொல்லுவேன். கவிதையின் வடிவம் பற்றி மகிழ்ச்சி.. அர்த்தம்..ம்ம்ம்ம்..
"எதையுமே சரியாக புரிந்து கொள்வதற்கு காலத்தின் இடைவெளி அல்லது தூரத்தின் இடைவெளி அவசியம்" (from JJ). Trust Space and Time, they can clear all confusions.
Post a Comment