காற்றின் மொழி - ஒலியா, இசையா ?
பூவின் மொழி - நிறமா, மணமா ?
கடலின் மொழி - அலையா, நுரையா ?
காதல் மொழி - விழியா, இதழா ?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை..
இவை "மொழி" படத்தில் இடம் பெற்ற பாடலின் முதல் சில வரிகள்...
என்னவோ தெரிய வில்லை... இந்த பாடல் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது..
(இந்த Blog ன் தலைப்பில் "மொழி" யும் இருப்பதாலோ, என்னவோ !!!)
"மொழி" படம் பார்த்து விட்டு வந்த பின் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன்.. இந்த பாடலை கேட்டுக் கொண்டே தான், இந்த Blog ஐ type இரவு 11.45 செய்து கொண்டிருக்கிறேன்.. (எவ்வளவோ முயன்றும் தூக்கம் வர வில்லை)
நீண்ட இடைவெளிக்கு பிறகு, Satyam Cinemas Theater ல் இந்த படத்தை முழு ஈடுபாட்டுடன், ஒன்றிப் போய் பார்த்தேன்.. முகம் சுளிக்காமல் வாய் விட்டு சிரித்து( சில முறை வயிறு வலிக்க சிரித்து)படம் பார்த்து பல நாட்களாயிற்று.
ஒரு Heavy Message ஐ வெகு எளிமையாக, நளினமாக கையாண்டு நகைச்சுவையை கலந்து அசத்தி இருக்கிறார்கள்..
No one should miss this movie !!!
1 comment:
yep, Amazing movie da... I laughed throughout the movie and couldnt stop crying when Jo cries loud near climax..
Post a Comment