Friday, September 28, 2007

சுழல்கள்

நம் எல்லோருக்கும் பிடித்தவை பிடிக்காதவை என்று சில விசயங்கள் நிச்சயமாக இருக்கும்.. அவை எப்படி தீர்மானிக்கப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல சமயம் பதில் சுலபமாக கிடைக்காது. நாம் வளர்ந்த , வளர்க்கப் பட்ட முறை மற்றும் சூழ்நிலையின் பதிப்பாக நம்மையே அறியாமல் சில வாழ்க்கை இலக்கணங்களை வகுத்துக் கொள்கிறோம்.. அதன் காரணமாக நம்மை சுற்றி நடக்கும் சிலவற்றை சகித்துக் கொள்ள முடிவதேயில்லை.. கோபிக்கிறோம்.. குற்றம் சாட்டுகிறோம்.. மனிதர்களிடத்து நாம் பழகும் விதமும் இதற்கு விதிவிலக்கல்ல.. சக மனிதர்களில் ஒரு சிலரை மிகவும் பிடிக்கிறது.. சிலரை அறவே பிடிப்பதில்லை..

ஒரு சிலரின் மீது நமக்கு அபரிமிதமான பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது.. அவர்களது பேச்சு, நடவடிக்கைகள், பழக்கங்கள் நமது "இலக்கணங்களுக்கு" அப்பாற்பட்டோ, முரணாகவோ அல்லது எதிர்மறையாகவோ கூட இருக்கலாம்.. ஆனாலும் விவரிக்க முடியாத காரணங்களால் எற்படும் பிடிப்பு மற்ற அனைத்தையும் சகித்துக் கொள்ள தூண்டுகிறது.. இப்படி "சகித்து"க் கொண்டு செல்லும் தருணங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு விதமான மன அழுத்தமும் அதிகரிக்கிறது..

இந்த மன அழுத்தம் ஒரு அளவை மீறிச் செல்லும் போது, அது முதலில் மனநிலையையும் பிறகு உடல்நிலையையும் பாதிக்கிறது.. அதை உணர்ந்து விலகி நிற்க முடிவெடுக்கும் தருணம் "வலி"கள் மிகுந்ததாகவே இருக்கும்.. ஒருவர் மீது கொண்ட அன்பை மறைத்து, கடினமாக நடந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான விசயமல்ல.. கண்கள் தவிர்த்து, முகத்தை இறுக்கி, புன்னகையை ஒழித்து, வார்த்தைகளை அளந்து.. ஹும்.. "வலி" பொருக்காது மீண்டும் மீண்டும் "சுழலுக்குள்" விரும்பியே சென்று மாட்டிக் கொள்வது எளிதானதாகவே இருக்கிறது..

இயற்கையாகவே அண்டங்கள் அனைத்தும் "சுழற்சி" யின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாலோ என்னவோ நம் மனங்களும் சுழல்களையே அதிகம் விரும்புகின்றன.

சுழற்சிகள் தொடரட்டும் !!!

6 comments:

Raghu said...

be specific, unnayum - yara pathi solla vara?

Vokat said...

anand, you mean going around and round?? :)

Sami said...

rombave kuzhapitta po

AKV said...

Raghu,
these thoughts may or may not be applicable to me.. Sometimes I keep myself in someother's place and narrate the thoughts.. :-)

Riyas,
yes.. the inability or unwillingness to come out of a spiral.

Sami,
Sorry.. kuzhappanumnu idha naan ezhudhala. May be you can give another try. :-)

Vokat said...

Let go...let go of things that you are holding on... It is difficult, but once you let go, then you will find you are free to grab another ...hihihihihi

நளன் said...

உண்மை தான் :)