கொள்கைகளை இறுகப் பற்றி,
ஒழுக்கத்தின் மேன்மையை
ஓங்கி உரக்கப் பேசி
இவரைப் போல் பண்பாளன்
எவருண்டென்ற புகழாரம் கேட்டு
நெஞ்சை நிமிர்த்தி நடந்து
மற்றவர் எடுத்துக்காட்டுவதற்காகவே
வாழ்ந்து.. ஹும்.. மகிழ்ச்சியில்லை.
போதும் மூளையின்
கட்டளைக்கு அடிபணிந்திருந்தது.
எஞ்சிய சில நாட்களேனும்
மனதின் கூப்பாட்டிற்கு
செவி கொடுப்பேனோ !!!
1 comment:
You are only a prisoner of time and nothing else....
Some people do try to free from time itself.... possible???
Post a Comment