Saturday, August 11, 2007

பாலும் ஒவனும் புரிவதில்லை.....

கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களையும் அவர் மனங்களையும் புரிந்து கொள்வதே மிகக் கடினமானது என இத்தனை நாளும் நம்பிக் கொண்டிருந்தேன்..

அதை பொய்யாக்கி விட்டது.. நான் வாங்கிய Vitamin-D பாலும், எனது அறையிலிருக்கும் Microwave Owenம்..

ஒரு டம்ளரில் பாலை ஊற்றி அதை Owen ல் இரண்டு நிமிடம் வைத்தால் பால் சூடேறி விடும் -இது நண்பர் சொல்லிக் கொடுத்த கணக்கு.. முதல் நாள் சரியாக இரண்டு நிமிடத்தில் பால் சூடேறி விட்டது.. Formula work out ஆகுதே னு சந்தோசப் பட்டேன்..

அடுத்த முறை.. அதே அளவு பால்.. அதே இரண்டு நிமிடம்.. Time set செய்து விட்டு நகர்ந்து விட்டேன்.. வந்து பார்த்தால் பால் பொங்கி வழிந்து.. வேகமாக துணியைத் தேடி, ஒரு வழியாக துடைத்து விட்டேன்.. "பால் பொங்கும் வாய்ப்பும் உண்டு - அருகிலேயே நில்" - நண்பர் எச்சரித்ததும் ஞாபகம் வந்தது.

அடுத்த முறை.. அதே அளவு பால்.. தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் வைக்காமல் ... ஒரு நிமிடம்.. முப்பது நொடி.. முப்பது நொடி.. என்று புது Formula வை கண்டுபிடித்தேன்..
வெற்றிகரமாக இரு முறை சோதனையும் செய்தேன்.. மனதில் பெருமிதம்.. இனி அருகிலேயே நிற்க வேண்டிய அவசியமில்லை..

அந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.. மூன்றாவது முறை.. ஒரு நிமிடம்.. முப்பது நொடி.. பால் பொங்கி வழிந்திருந்தது... :-(

மீண்டும் துடைத்தேன்..

இப்பொழுதெல்லாம் அருகிலேயே நிற்கிறேன்.. பால் மட்டும் பொங்குவதேயில்லை..

புரிந்து கொள்ள முடியாத படைப்புகளை படைப்பதில் மனிதரும் கடவுளுக்கு நிகராக முன்னேறி விட்டது போல் தெரிகிறது !!! ஹும்... வாழ்க மனிதர் குலம் !!!



பி.கு : எனது அறியாமையை மறைப்பதற்கு வேறு வழி தெரிய வில்லை. :-)

5 comments:

Raghu said...

thambi kitchennukka puthsa?

Sami said...

dei, paal matter-la murphy's law, thathuvum appadinu oru periya round adichitta.

enzoi :)

on a serious note, ithellam neee evvalavu thanni mix panra, milk fat athey alavu thaana ellam parkkanum. also r u sure that u kept the exact amount everyday?

AKV said...

Hey Raghu.. Kitchen palagi pona idam thaan.. Even at Chennai, I survived with my self-cooking for more than a month after getting fed-up with the hotels there..
Micro Owen mattum thaan yenakku puthusu !.

Hey Sami.. Thanks for the tips.. I think that I kept the same level of milk and same mix of water all the times.. There could be minor variations. I did not want to take pain in making it very precise..

Vokat said...

Anand, i think i got the answer!.
1. The initial temperature of the Milk and your current room temperature differs every day!.
2. Microwave don't have feedback system (It just heats up for 2 min, what ever the initial/final temperature).

So some time, the Milk do get spill over.
Riyas

AKV said...

Riyas ! You are always good in finding logical answers. You have proved it yet another time.
:-)