ஒரு மனிதரின் நிரந்தரமான அடையாளம் தான் என்ன ?..
கண்ணுக்கு தெரியும் முக அழகு நிரந்தரமாக நீடிப்பதுமில்லை.. பலர் மார்க்கெட்டில் கிடைக்கும் Cream களை பயன்படுத்தி கெடுத்துக் கொள்கிறார்கள்.. இன்னும் சிலர் Plastic Surgery செய்து மாற்றி விடுகிறார்கள்..
என்னைப் பொறுத்த வரை மனிதரின் குணாதிசயங்கள், அவரைப் பற்றிய நினைவுகள் தான் என்பேன்.. ஒருவர் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்கிறார்.. சக மனிதர்களிடம் எவ்வாறு பழகுகிறார், பேசுகிறார் போன்ற விசயங்கள் நம் மனதில் நினைவுகளாக ஆழ்ந்து பதிந்து விடுகின்றன..
பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு, தெரிந்த ஒரு மனிதரின் பெயரை பிறர் சொல்லக் கேட்டாலோ, எங்கேனும் படித்தாலோ அவரைப் பற்றி பதிந்த நினைவுகள் மட்டுமே நம் முகத்தில் ஒரு புன்னகையையோ இல்லை சுழிவையோ தோற்றுவிக்கின்றன..
இந்த நினைவுகள் நம்மை சில சமயம் பாடாய் படுத்தி விடுவதும் உண்டு.. ஒருவர் செய்யும் தவறுகளை அவ்வளவு எளிதாக மன்னிக்க முடிவதுமில்லை.. நமது மூளை அந்த நினைவுகளை, கேட்ட சொற்களை recursive முறையில் process தொடர்ந்து வாதங்களை முன் வைத்த வண்ணமே இருக்கும்.. இந்த வலையில் இருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கிறது..
கணிணியைப் போல் மனிதரின் மூளையில் பதிந்த சில நினைவுகளை நிரந்தமாக அழிக்கவும் , சிலவற்றை மறுபதிவு செய்வதும் சாத்தியம் என்றாகிப் போனால் இவ்வுலகம் எப்படி இருக்கும்..
ஹும்.. சிந்தித்துக் கொண்டே தூங்க போகிறேன்.
No comments:
Post a Comment