Tuesday, June 19, 2007

பலம் என்பது யாதெனில்....

உன்னால் எத்தனை முறை தொடர்ச்சியாக
"push-ups" செய்ய முடியும் ?

உன்னால் எத்தனை முறை தொடர்ச்சியாக
"sit-ups" செய்ய முடியும் ?

"biceps" ம், "triceps" ம் எத்தனை
கிலோ எடையில் செய்வாய் ?

உடற்பயிற்சி செய்து கொண்டே
பெருமிதம் பொங்க
நண்பனிடம் எக்காளமாக கேட்ட
கேள்விகள் தான் எத்தனை !!!

கணிணியின் முன் அமர்ந்து
அயற்சியின் காரணமாக
எடை தாங்க இயலாமல்
வெகு வேகமாக இறக்கி வைத்தேன்

என் மூக்குக் கண்ணாடியை..

1 comment:

Sami said...

dei,
ennada, push-up-ngra, biceps-ngra
ennamo poda. appo partha olli anandha itha ellam thookrathu...munnadi danush mathiri irundha..ippo?

eppadi irundha nee ippadi aayitta !!!! :)