Saturday, July 21, 2007

பெண்கள் - சில தாக்கங்கள்...

எனது சிறு வயது முதலே பெண்கள் மீது எனக்கு ஒரு விதமான பயம் கலந்த மரியாதை உண்டு.. அதற்கு எனது தாயாரின் கண்டிப்பும், அன்பு கலந்த மிரட்டலும் ஒரு காரணம்.. இன்னமும் நினைவிருக்கிறது... 4 ஆம் வகுப்பு படிக்கும் போது, வீட்டருகே குடியிருந்த சக மாணவி தனது தாயாருடன் என் வீட்டிற்கு வந்த பொழுது ஒரு அறையினுள் சென்று தாளிட்டுக் கொண்டு அவர்கள் திரும்பி செல்லும் வரை வெளி வராமல் இருந்தேன்.. High School, +1, +2 - Boys மட்டும் பள்ளியில் படித்ததால் பெண்களால் பெரிதாக "பாதிப்பு" ஒன்றும் இல்லை.. :-)

கல்லூரியில் முதலாமாண்டில் வகையாக மாட்டிக் கொண்டேன்.. சக மாணவியிடம் "Notes" கொடுத்து அவரும் எனது Notes ஐ வெகுவாகப் பாராட்டி , மீண்டும் மீண்டும் Notes கேட்க.. சக மாணவர்களும், நண்பர்களும் செய்த அளவு கடந்த கிண்டலில், அந்த மாணவியிடம் சென்று , நண்பர்களின் கிண்டலைச் சொல்லி, இனி Notes கேட்க வேண்டாம் என்று சொல்லும் படி ஆயிற்று.. பிறகு வந்த ஆண்டுகளில் சக மாணவிகளிடம் அளவோடு பேச ஆரம்பித்து, கல்லூரி இறுதி ஆண்டில் மிகவும் சகஜமாகப் பேச பழக முன்னேறி விட்டேன்..

இருந்தாலும் பெண்களிடம் (என்னை விட இளையவராக இருந்தாலும்) " வா.. போ..." என்று ஒருமையில் பேசுவது என்பது இயலாமல் போய் விட்டது.. ஒரு மரியாதையின் நிமித்தமாகத் தான்.. :-). எனது கல்லூரி நண்பிகள் இன்றும் என்னை இது குறித்து கிண்டல் செய்வது வாடிக்கை..

நான் பெண்களிடம் கொண்ட "பயம்" கலந்த மரியாதையின் காரணமாக காட்டும் பணிவும் கரிசனமும் ஒரு "Soft-corner" என்கிற முறையில் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவதும் வேடிக்கையே !!!

சமீப ஆண்டுகளில், படிப்பை முடித்து வேலையில் சேரும் இளையவர்களை நோக்கும் பொழுது அவர்களுடைய மனப்பான்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது... முக்கியமாக பெண்கள் தங்கள் வயதொத்தவர்களிடம் பேசும், பழகும் முறை சில சமயம் அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது..

உதாரணத்திற்கு எனது நண்பர் அறிமுகம் செய்து வைத்த நண்பி ஒரு முறை Chat ல் கேட்ட கேள்வி..

"உன்னுடைய Take Home Salary எவ்வளவு ? "...

"ஆமாம்... ஏன் கேட்கிறாய்"...

"என்னோட அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்.. அவருக்கு உன்னையும் சிபாரிசு செய்யலாமா என்று யோசிக்கிறேன்.."

"ஓகோ !!! (கலி காலம் டா !) என்ன xyz ஆயிரம் வரும்..."

"சரி... உன்னை Waiting list ல் வைத்துக் கொள்கிறேன்..."

"நன்றி (அடிப்பாவி).."

எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு துளி சந்தோசம்... நல்ல வேளை.. "reject" செய்து எனது "image" ஐ "damage" பண்ணாமல் விட்டாளே என்று !!!

ஹ்ம்ம்... பெண்களில் தான் எத்தனை வகை.. இப்படி எதற்கும் கவலைப் படாமல் துணிச்சலாக கலாய்க்கும் பெண்கள் ஒரு வகை.

நாமாக பேச்சு கொடுக்க முயன்றாலும், நம் உள்நோக்கம் குறித்து சந்தேகித்து அதிகம் பேசாமல் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு விலகி நிற்கும் பெண்கள் ஒரு வகை.

எதற்காகவாவது எப்பொழுதேனும் உபயோகப்படுவோம் என்ற அடிப்படையில் வலிய புன்னகைத்து, பாசம் தெளித்து, ஆர்வம் காட்டி நட்பு கொள்ள முயலும் பெண்கள் ஒரு வகை.

நம்மையும் நமது செயல்களையும் விமர்சித்து சீண்டிப் பார்க்கும், பொறுமையை சோதிக்கும் பெண்கள் ஒரு வகை.

ஒரு வார்த்தை கூட பேசாது, பார்வையால் மட்டுமே திருடி, அந்த பார்வையின் அர்த்தம் விளங்காமல் குழம்பி தவிக்க வைக்கும் பெண்கள் ஒரு வகை. (நம்ம Personality க்கு கொஞ்சம் Over ஆ தான் தெரியுது.. கண்டுக்காதீங்க..)

இன்றைய நிலையிலும், நான் பார்த்த வரை, பெரும்பாலான பெண்கள் "சார்ந்து" வாழும் மனப்பான்மை உடையவர்களாவே இருக்கிறார்கள். பிரச்சனைகளை (வலிய சென்று ஏற்படுத்திக் கொண்டவை அதிகம்) எதிர்கொண்டு ஆராய்ந்து தானாக தீர்வுகள் காண்பதை விட, அந்த பிரச்சனைகளை மற்றவரிடம் கூறி தற்காலிகமாக தப்பித்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். இது இயற்கையின் நியதியோ ?.

இப்படிப் பெண்கள் பல வகைகளின் கலவையாக, எனக்கு பிரமிப்பூட்டுபவர்களாவே இருக்கிறார்கள்..

நானும் நல்ல மாணவனாக ரசிகனாக நாளடைவில் தேர்ந்து வருகிறேன்..
பாடம் தொடரும் !!!
:-)

பிகு :

இது எனது எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே.. பெண்களைப் பற்றி குறை கூறுவதாகவோ / இழிவு படுத்துவதாகவோ பொருள் கொள்ள வேண்டியதில்லை..

There is nothing called right or wrong. Its just the way of things. I have learnt to accept things as they are and live with them.

நாம் பெரிதும் மதிக்கும் நமது கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கங்களாய், அன்பும் பண்பும் துணிவும் ஒழுக்கமும் நேர்மையும் சீரிய சிந்தனையும் கலந்து, சீர்மிகு வாழ்க்கையை வாழத் துணை நிற்கும் அரிதான பெண்களும் ஒரு வகை..

இன்றைய கால கட்டத்தில் இது கற்பனையின் உச்சமாகத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்ட பெண்களும் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.. அவர்களுக்கு என்றும் தலை வணங்குவேன்.

அப்பாடா ! தப்பித்தேன் !! :-)

5 comments:

Unknown said...

Lesa generalise panrelo pengalai? Aangalaiyum ippadi varisai pannalam teriyuma :) Good post though.

AKV said...

Hi S !

>> Aangalaiyum ippadi varisai pannalam teriyuma :)

Why not ?.. Yenakku ulla freedom ungallukkum undoo. Thaaralama varisai panni sollungaa.. Am so eager to know what you have to say.

Thanks for visiting the blog. Would be great if you could reveal who you are.

Anonymous comments annoy me always !.. :-)

Unknown said...

Illaiya. Anonymous illaiye. You can find my email ID in my post. (I dont want to give it out here avlo dhan)

Varisai padutha naan ready. Ketka neengal readya? Neengal endha varisaikul irupeergal ena mudivu seiyalam. :)

AKV said...

All I can see is the letter "S". You might have used Google account to login but it is not visible to me. Your blogger profile too is missing. so you are still anonymous to me.

Ungaludaya varisaikalai ketka naan ready. Naan endha varisai yenbhadai pattri kavalai pada povithillai.. adharku avasiyamum illai.. ;-)

AKV said...

I guess I got you !!!.. So you connected via a VPN network and did a Google with my name and caught my blogger profile.
Right ?.

So you are still working on "varisaigal" ?.