Sunday, August 19, 2007

தொலைத்து விட்ட முகம் !

உலகம் என்னும் நாடக மேடையில்
இன்னொரு நடிகனாயிருக்க என்றுமே
என் மனம் ஒப்புதல் அளித்ததில்லை..

முகங்களைத் தேடி அதிகம் கிடைக்காமல்
நான் அலுத்துப் போயிருந்தாலும்
என் முகத்தை மட்டும் தொலைக்காமல்
கவனமாக இருந்தேன்..

முகமென்று கண்டு மூடியாய் உணர்ந்து
விலக முடிவெடுத்த தருணத்திலும்
என் முகம் காட்டியே
என் முகம் காக்கவே
வேண்டுகோளும் விடுத்தேன்..

அதைக் காது கொடுத்து கேட்டும்
கேட்காமல், இரக்கமுமில்லாமல்
சாயங்கள் பல கலந்து
முகத்தில் தெளித்து எனையும்
நடிகனாக்கி விட்டதன்
நியாயம் தான் என்ன !

இன்றும் நான் முகங்களைத் தேடிக்
கொண்டு தான் இருக்கிறேன்.
உன்னால் நான் தொலைத்த
என் முகத்தையும் சேர்த்து !!!

6 comments:

Vokat said...

That was excellent da. Must have wasted the whole weekend to write it. Yes...all the ideals and principles will have a breaking point one day. Everyone have to go through this time and live it and bend your knees and head to this monotonity rat race.

AKV said...

Hi Riyas.. The thoughts were in my mind for quite some time. But did not get a chance to give them a shape. Finally I managed to do it in the weekend.. took an odd 30 mins.. Thanks for the comments.

Raghu said...

it is natural, i am sure you are not alone :-)

AKV said...

Thats very much true Raghu. :-)

someone else said...

can you translate this for me?

AKV said...

@ someone else,

Thanks for your interest. thats a piece written in Tamil with the title - "The face that got lost"..

Its just a expression of thoughts & anguish by someone who is not willing to loose his face - his identity.. eventually he was forced to wear a mask.. he ends up searching faces including the one he himself lost..